By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு திடீர் தடை: மெர்காரியின் அதிரடி முடிவு
    1 Min Read
    கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: இடைக்கால பிரதமர் மீது முட்டை வீச்சு
    1 Min Read
    காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா: தடுப்பூசி இல்லாத அபூர்வ வைரஸ் அச்சுறுத்தல்
    2 Min Read
    ஈரானுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம்: அமெரிக்க தளபதி டான் கெய்ன் வலியுறுத்தல்
    2 Min Read
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அங்கித் திவாரி லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ‘அனலாக் பன்னீர்’ விற்பனைக்கு தடை!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்
    2 Min Read
    அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது
    2 Min Read
    பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானம்: 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த வரலாறு
    2 Min Read
    மாணவர்கள் கண்டெடுத்த அரிய காசுகள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்: வரலாற்றை தேடும் திருப்புல்லாணி மாணவர்கள்
    1 Min Read
    மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு… தெரிந்து கொள்ளுங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானம்: 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த வரலாறு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானம்: 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த வரலாறு
தமிழகம்

பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானம்: 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த வரலாறு

Nagaraj
Last updated: August 9, 2026 7:15 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சிவகங்கை: தேவகோட்டை வட்டம் பிரண்டவயல் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழமையான கல்வெட்டு, சுமார் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானமாக வழங்கப்பட்ட தகவலை இந்தக் கல்வெட்டு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரண்டவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்து மற்றும் ஆறாவயல் பெரியய்யா ஆகியோர் அளித்த தகவலின் பேரில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா கள ஆய்வு மேற்கொண்டார்.

ஐந்து வரிகளில் வரலாற்றுச் செய்தி

மூன்று அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட கல்வெட்டில் மொத்தம் ஐந்து வரிகள் காணப்படுகின்றன.

“திருனாகீசர், க்கு முத்து குமா, ரு தேவர் பிற, தோச கட்டளைக்கு, நம்பு குளி” என எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

எழுத்தமைதியின் அடிப்படையில் இது 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

முத்துகுமார் தேவர் என்பவர் திருநாகீசர் கோயிலில் பிரதோஷ வழிபாட்டுக்கான கட்டளைக்காக ‘நம்புகுளி’ எனப்படும் நிலப்பகுதியை தானமாக வழங்கிய செய்தியை கல்வெட்டு குறிப்பிடுவதாக அவர் விளக்கியுள்ளார்.

கல்வெட்டில் சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தை குறிக்கும் திரிசூலச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இன்றும் தொடரும் நிலப்பெயர்

நிலத்தை தானமாக வழங்கிய முத்துகுமார் தேவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த நிலக்கிழாராக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், பிரண்டவயல் பகுதியில் ‘நம்புகுளி’ என்ற பெயரில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பகுதி இன்றும் கோயில் நிலமாக அழைக்கப்படுவது இந்த கல்வெட்டின் தகவலுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பிரண்டவயலுக்கு அருகில் உள்ள கோட்டவயலில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குட்பட்ட நாகநாதர் கோயில் அமைந்துள்ளதால், கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருநாகீசர் இந்தக் கோயிலுடன் தொடர்புடையவராக இருக்கலாம் எனவும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

பிரதோஷக் கட்டளையின் பழமை

கல்வெட்டில் ‘குழி’ என்பது ‘குளி’ என்றும், ‘பிரதோஷம்’ என்பது ‘பிறதோசம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதோஷக் கட்டளை என்பது தொன்று தொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதை தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட சோழர் கால சிவாலயக் கல்வெட்டுகளும் உறுதிப்படுத்துகின்றன. பிரதோஷ நாளில் இறைவனுக்கு உணவு படைப்பதற்காக காசு, பொன் மற்றும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட தகவல்கள் பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

 

You Might Also Like

ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்

அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது

மாணவர்கள் கண்டெடுத்த அரிய காசுகள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்: வரலாற்றை தேடும் திருப்புல்லாணி மாணவர்கள்

மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு… தெரிந்து கொள்ளுங்கள்!!!

கோயில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதன் காரணம் இதுதான்! தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:ArchaeologyhistoryInscriptionPradoshamSivagangatemple landகல்வெட்டுகோயில் நிலம்சிவகங்கைதொல்லியல்பிரதோஷம்வரலாறு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?