சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வகுப்புகளுக்கு ஏற்ப செப்டம்பர் 16 முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளன.
1 மற்றும் 2-ம் வகுப்புகள்
ஒன்று மற்றும் இரண்டு வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ம் தேதி வரை நடைபெறும்.
3 முதல் 10-ம் வகுப்பு வரை
3 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 16-ம் தேதி முதல் செப்டம்பர் 24-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு
11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 25-ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை வெளியானதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வுக்கான இறுதிக்கட்ட தயாரிப்பில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
