கும்பகோணம்: இருசக்கர வாகனம் மோதி கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சோழபுரம் புதுத்தெருவை சேர்ந்த பரணிதரன் (23), பாபநாசம் அருகே கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜய் (24). இந்நிலையில், நேற்று இரவு தஞ்சாவூருக்கு சென்று விட்டு, இருவரும் தனிதனியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்றுள்ளனர்.
அப்போது, தஞ்சாவூர் – விக்கிரவாண்டி பைபாசில், சுந்தர பெருமாள் கோவில் மேம்பாலம் பகுதியில் இருவரும், மழையின் காரணமாக எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டதில், பரணிதரன் மற்றும் விஜய் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சுவாமிமலை போலீசார், பரணிதரன், விஜய் இருவரின் உடலையும் கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.