சென்னை : தியேட்டர்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது ஐகோர்ட் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தியேட்டரில் புதிய திரைப்படங்களுக்கு முதல் 4 நாட்களுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட் அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
OTT-ல் சினிமா பார்ப்பது அதிகரித்திருப்பதால் தியேட்டர்கள் வெகுகாலம் நீடிக்காது என்பதை உரிமையாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. நடுத்தர மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக தியேட்டர்கள் மட்டும்தான் உள்ளது. ஆனால் இங்கும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
இந்நிலையில் கோர்ட்டின் இந்த உத்தரவு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.