By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலீஷ் கால்வாயில் பரபரப்பு: ரஷிய போர்க்கப்பல் வார்னிங் ஷாட்?
    1 Min Read
    ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி: உலகத் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்? தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள்
    1 Min Read
    பிலிப்பைன்சில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம்! அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
    1 Min Read
    நார்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டு சிறை! பாலியல் வழக்கில் தீர்ப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
    திருப்பதி லட்டு தரம் உறுதி! மத்திய ஆய்வு நிறுவனத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம்
    1 Min Read
    இந்திய ஒருமைப்பாட்டுக்காக 10 ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்! இளைஞருக்கு உற்சாக வரவேற்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
    1 Min Read
    தமிழக மின் கட்டமைப்பில் மிகப்பெரிய மேம்பாடு: ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்!
    1 Min Read
    7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளில் பலத்த காற்று வீசுமாம்
    1 Min Read
    டாக்டர் பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து கிடையாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
    1 Min Read
    தடைக்காலம் முடிந்ததும் அமோக மீன்பிடி: ராமேசுவரம் மீனவர்களுக்கு ரூ.10 கோடி வருவாய்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்ஸ்பெக்டர் போல் பேசி விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் பறித்தவர் கைது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > இன்ஸ்பெக்டர் போல் பேசி விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் பறித்தவர் கைது
தமிழகம்

இன்ஸ்பெக்டர் போல் பேசி விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் பறித்தவர் கைது

Nagaraj
Last updated: January 28, 2025 11:57 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்களை அழிக்க வேண்டும் எனக் கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல் பேசி விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். இவர் தமிழ்நாடு முழுவதும் கைவரிசை காட்டியது அம்பலமானது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ராஜா (45). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவருடைய செல்போனில் தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசினார். அப்போது அவர், நான் தல்லாரகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன் எனக்கூறி, ஒரு நபரை கைது செய்த போது அவரது செல்போனில் உங்களது உறவுக்கார பெண்ணின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளது.

இந்த ஆபாச படங்கள், வீடியோக்களை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என ராஜாவிடம் பொய்யான தகவலை கூறியுள்ளார். மேலும் அவரை மிரட்டி ஏமாற்றும் உள்நோக்கத்தில் ரூ.7 ஆயிரத்தை பெற்றுக் கொண்டதாக ராஜா தஞ்சை சைபர் கிரைம் போலீசில், புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணை கொண்டு அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என கண்காணித்தனர். அப்போது, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாறி, மாறி அவரது செல்போன் எண் காண்பித்தது. இதையடுத்து அந்த மர்மநபரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோஸ்லின் அந்தோணியம்மாள், கார்த்திக், ஏட்டு இளையராஜா, போலீசார் சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த மர்ம நபர் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கோஸ்கோட் என்னும் இடத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அந்த மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாண்டிய பிரகாஷ் (35) என்பது தெரியவந்தது.

இவர், தனது செல்போனில் இருந்து ஏதாவது ஒரு நம்பரை தொடர்பு கொண்டு தான் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது இன்ஸ்பெக்டர் என கூறி அவர்களை மிரட்டி, அவர்களது தகவல்களை எல்லாம் அனுப்ப சொல்லி, அதில் உள்ள பெண்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது ஆபாச படங்கள் மற்றும் வீடியோ உள்ளது என தன்னிடம், அதை சைபர் கிரைம் போலீசில் கொடுத்து அழிக்க வேண்டும் எனவும், அதற்கான தொகையை அனுப்ப வேண்டும் எனவும் கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதுபோன்று தமிழகம் முழுவதும் நிறைய நபர்களிடம் இவர் பணம் பறித்துள்ளது போலிசாரின் விசாணையில் தெரியவந்தது. தொடர்ந்து பாண்டிய பிரகாசை போலீசார் கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். இதுபோன்று அடையாளம் தெரியாத நபர்கள் போலீஸ் துறையில் இருந்து பேசி பல்வேறு காரணங்களை கூறி மிரட்டி பணம் கேட்டால் அதை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

You Might Also Like

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

தமிழக மின் கட்டமைப்பில் மிகப்பெரிய மேம்பாடு: ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்!

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளில் பலத்த காற்று வீசுமாம்

டாக்டர் பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து கிடையாது: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தடைக்காலம் முடிந்ததும் அமோக மீன்பிடி: ராமேசுவரம் மீனவர்களுக்கு ரூ.10 கோடி வருவாய்!

TAGGED:arrestCyber ​​CrimeSpecial Forces PoliceThanjavur DistrictTheniகைதுசைபர் கிரைம்தஞ்சாவூர் மாவட்டம்தனிப்படை போலீசார்தேனி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?