சென்னை: கொளுத்திய வெயில்… சென்னை மீனம்பாக்கம் மற்றும் வேலுாரில் நேற்று மாலை நிலவரப்படி, 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 11 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், வேலுார் பகுதியில் 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, திருத்தணியில் 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், கரூர், மதுரை, நாமக்கல், பாளையங்கோட்டை, புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் வெயில், 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.