புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான காய்கறி, பழங்கள், பூக்கள் உள்ளிட்டவை பெரும்பாலானவை பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பொருட்களின் வரத்தை பொறுத்து விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வரும்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக காய்கறிகள் வரத்து குறைவாக இருந்த காரணத்தினால் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. தற்போது காய்கறிகள் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரங்களில் கிலோ 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி கிலோ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி விலைகள் :
வெங்காயம் கிலோ: ரூ:40, நாட்டுக் கத்தரிக்காய் ரூ.60, பவானி கத்தரி: ரூ.45, பீரங்கி காய் : ரூ. 45, பீன்ஸ் ரூபாய் ரூ.50, அவரை ரூ 80, பீட்ரூட் ரூ. 40 விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முருங்கைக்காய் ரூ.100க்கும், கேரட் கிலோ ரூபாய் 80 விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், புதுவைக்கு வரும் காய்கறி வாரத்தில் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக விலை அதிகமாக காணப்பட்டது இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிப்படைந்தார்கள். இந்நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகள் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது என்றார்.