கன்னியாகுமரி: கன்னியாகுமரி – ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி காட்ரா இடையே இயக்கப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக கூடுதல் 3-ம் அடுக்கு ஏசி பெட்டி இணைக்கப்பட உள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி காட்ரா வரை ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (16317/16318) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படுகிறது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் வசதிக்காக ரெயிலில் தற்காலிகமாக ஒரு கூடுதல் 3-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டி இணைக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஜூன் 12 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படும். இதேபோல் மறு மார்க்கத்தில் ஜூன் 15 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கூடுதல் பெட்டியுடன் ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.