திருநெல்வேலி: பைனான்ஸ் தொழிலுக்கான உரிமம் புதுப்பிக்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சேரன்மகாதேவியைச் சேர்ந்த மூக்காண்டி தனது பைனான்ஸ் தொழிலுக்கான உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார். அதற்காக கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மூக்காண்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அதிகாரிகள் மறைந்து கண்காணித்தனர். மூக்காண்டி கொடுத்த லஞ்சப் பணத்தை, இதயக்கனியின் உதவியாளராக செயல்பட்ட புரோக்கர் வெங்கடேசன் பெற்றுக்கொண்டபோது இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனர்.