By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடும் மோதல்! 30 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
    1 Min Read
    துபாயில் கோர விபத்து: இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு
    1 Min Read
    அரபிக்கடலில் தாக்குதல்: 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
    நேர்காணலை பாதியில் நிறுத்திய டிரம்ப்… என்.பி.சி. தொகுப்பாளருடன் கடும் வாக்குவாதம்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நீட் மறுதேர்வுக்கு கடும் பாதுகாப்பு! விமானப்படை உதவியுடன் வினாத்தாள் விநியோகம்
    1 Min Read
    சம்மதத்துடன் உறவு குற்றமல்ல! முக்கிய தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்
    1 Min Read
    ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்? 50 வயது வரை செல்லுபடியாகும் திட்டம்
    1 Min Read
    இந்தியா – இந்தோனேசியா உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை… மோடி பயணத்திற்கு முன் முக்கிய சந்திப்பு!
    1 Min Read
    நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்… “மறக்க முடியாத கலைஞர்” என புகழாரம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நோயையும் எதிர்க்கணும்… உடல் நலத்துடனும் வாழணும்… என்ன செய்யணும்!
    2 Min Read
    புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் தன்மை கொண்ட முட்டைகோஸ்
    1 Min Read
    நார்ச்சத்து உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பழ சாலட்
    1 Min Read
    மதிய நேரத் தூக்கம்… அதிக நேரம் வேண்டாம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.!!
தமிழகம்

பாசனத்திற்காக வைகை அணையில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.!!

admin
Last updated: December 22, 2024 12:43 pm
By admin 1 Min Read
Share
SHARE

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, கடந்த 18-ம் தேதி அணையின் நீர்மட்டம் 62 அடியை தாண்டியதும், அணையில் இருந்து மீண்டும் ஒருமுறை பாசனத்திற்காக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று அணையில் இருந்து நீர் திறப்பு 1,669 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 64.37 அடியாக உள்ளது.

அணைக்கு நீர்வரத்து 1,900 கன அடியாகவும், நீர் இருப்பு 4,492 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஒரு போக பாசன பகுதிக்கு வைகை அணையில் இருந்து ஆண்டுக்கு 120 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடர்ந்து 45 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து வழக்கமான பாசன அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

பின்னர், பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் அணை நிரம்பியதாலும், ஒருபோக பாசன பகுதிகளில் மழை இல்லாததாலும் மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, மதுரை மாவட்டம் திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You Might Also Like

நோயையும் எதிர்க்கணும்… உடல் நலத்துடனும் வாழணும்… என்ன செய்யணும்!

புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் தன்மை கொண்ட முட்டைகோஸ்

நார்ச்சத்து உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பழ சாலட்

மதிய நேரத் தூக்கம்… அதிக நேரம் வேண்டாம்!!!

TAGGED:AndipattiVaigai DamWater releaseநீர் திறப்புவைகை அணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நோயையும் எதிர்க்கணும்… உடல் நலத்துடனும் வாழணும்… என்ன செய்யணும்!

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?