சென்னை : மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் திறக்கப்படுகிறது என மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். எதற்காக தெரியுங்களா?
மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்படும் என்று ஏழை, எளிய மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பிப்.24ஆம் தேதி சென்னையில் முதல்வர் மருந்தகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் மிக குறைந்த விலையில், மருந்து, மாத்திரைகள் கிடைக்கும். இதனால், மக்கள் அதிகளவில் பயன்பெறுவதோடு, மெடிக்கலுக்கு செலவிடும் தொகையும் குறையும்.
இந்த அறிவிப்பு ஏழை மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரம் இடங்களில் திறக்கப்படும் இந்த முதல்வர் மருந்தகம் கிராமப் பகுதிகளிலும் அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.