சென்னை: நம் தாத்தா, பாட்டி காலத்தில் சாப்பிட்டதை விட அதிக காய்கறிகள், பழங்களை நாம் சாப்பிடுகிறோம். இருப்பினும் நம் உடல் அவர்களைக் காட்டிலும் பல மடங்கு வலிமையற்றே உள்ளது. இதற்கு உணவில் சேர்க்கப்படும் நச்சு மட்டும் காரணம் இல்லை. நாம் சாப்பிடும் விதமும் ஒரு காரணமே.
முந்தைய நாள் சமைத்த உணவு அமுதாகினும் அவற்றை மறு நாள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். உணவுப் பொருட்களை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து பின்னர் சாப்பிடும் போது உணவில் நச்சுத் தன்மை ஏற்படுகிறது. இவை நம் உடலில் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அதேபோல், நன்கு பசித்த பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும். பசியின்றி சாப்பிடும் எந்த உணவாகினும் அவை நஞ்சே. சித்தர்கள் பாடலில், ’நீர் சுருக்கி, மோர் பெருக்கி, நெய் உருக்கி உண்பவர் தம் பேருரைக்கிற்போமே பிணி’ எண்பார்கள். அதாவது எப்போதும் கொதித்து ஆறிய நீரைப் பருகவேண்டும். மோரில் இருந்து வெண்ணெய் பிரித்தெடுத்த பின்னர் அதில் அதிக அளவில் நீரைச் சேர்த்து பருகவேண்டும். நெய்யை எப்போது உருக்கி உண்ணவேண்டும்.