சென்னை: அஜித்குமார் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘குட் பேட் அக்லி’. இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூபாய் தாரே’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’, ‘இளமை இது இதோ’ ஆகிய பாடல்கள் படத்தில் இடம் பெற்றன. இந்த பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தப் பாடல்கள் படத்தில் இடம் பெற்ற இடமும், அவற்றை வழங்கிய விதமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படம் வெளியானதும் இளையராஜா தரப்பில் இருந்து படக்குழுவினருக்கு முறையான அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில், இளையராஜாவின் பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டதால் ‘குட் பேட் அக்லி’ படம் ஹிட் ஆனது என்று கங்கை அமரன் கூறியிருந்தார்.
இதுபற்றி நடிகரும், கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி கூறும்போது, “அண்ணனுக்கு பிரச்சனை வரும்போது என் அப்பா அண்ணனுக்காக பேசுவார், அண்ணனுக்கு பிரச்சனை என்றால் நான் பேசுவேன், இல்லையா? அதேதான்.. இளையராஜாவால் படம் வெற்றியடைந்தது என்று அவர் சொல்வதைக் கேட்கிறீர்கள். அதெல்லாம் முட்டாள்தனம். உண்மை என்பது அனைவருக்கும் தெரியும். தல படம் இருந்தால் மட்டுமே வெற்றி பெறும்.