புதுடில்லி: தாக்குதல் எல்லைக்குள் தான் முழு பாகிஸ்தானும் உள்ளது என்று இந்திய ராணுவ வான் பாதுகாப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முழுப் பகுதியும் இந்தியாவின் தாக்குதல் எல்லைக்குள் தான் உள்ளதாக ராணுவ வான் பாதுகாப்பு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் டி’குன்ஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஆபரேஷன் சிந்தூரின் போது இலக்குகளை குறி வைத்து தாக்கும் ஆயுதத் திறனை நாம் கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் தனது ராணுவ பொது தலைமையகத்தை ராவல்பிண்டியில் இருந்து கைபர் பக்துன்க்வா பகுதிக்கு மாற்றினாலும் அதுவும் நமது தாக்குதல் எல்லைக்குள் தான் உள்ளதாக சுமர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஆழமான பதுங்குகுழிகளையும் தாக்கும் வகையில் நவீன உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூர ட்ரோன்கள், வழிகாட்டப்பட்ட வெடிமருந்துகள் நம்மிடம் உள்ளதாக சுமர் கூறினார்