டெல்லி: வருமான வரி தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் போர்ட்டலைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதியே இந்த போர்டல் திறக்கப்பட்டது, எனவே சரியான நேரத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடிந்தது.

இந்த ஆண்டு மே 21-ம் தேதி என்றாலும், போர்டல் இன்னும் திறக்கப்படாததால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் அவதிப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்குச் செல்வோர் உட்பட பல்வேறு தரப்பினரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.