ரஷ்யா: உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இருவரும் தொலைபேசியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய புதின், டிரம்ப்புடனான பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருந்ததாகத் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் தனது நிலைப்பாட்டை தெரிவித்ததாகவும், அமைதி ஒப்பந்தம் குறித்து உக்ரைனுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளதாகவும், போருக்கான மூல காரணங்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் என்பதில் ரஷ்யா உறுதியுடன் இருப்பதாகவும் புடின் தெரிவித்தார்.