மும்பை: நாங்கள் இந்துக்களே தவிர ஹிந்தியர்கள் கிடையாது என்று நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மஹாராஷ்டிர பள்ளிகளில் 3ஆவது மொழியாக ஹிந்தி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் அறிவிப்பை நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.
நாங்கள் இந்துக்களே தவிர ஹிந்தியர்கள் இல்லை. ஹிந்தி தேசிய மொழி இல்லை என அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேர்தல் வெற்றிக்காக மராத்தியர்கள்- மராத்தி அல்லாதவர்களுக்கு இடையே அரசு மோதலை உருவாக்குவதாகவும் சாடியுள்ளார்.