May 6, 2024

கருமேகங்கள் கலைகின்றன படத்திற்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

சினிமா: தங்கர் பச்சன் இயக்கத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்ந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;- “இயக்குனர் தங்கர் பச்சனின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை பார்த்து ரசித்தேன்.

இப்போது வெளியாகும் படங்களில் ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், டபுள் மீனிங் டயலாக்குகள் அதிகம். குடும்ப உறவுகளின் பெருமையை சொல்லும் இப்படம், காதலையும் கலாச்சாரத்தையும் பேசும் படம்.

பொதுமக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கௌதம் வாசுதேவ் மேனன், ஆர்.பி.உதயகுமார், நடிகர் யோகிபாபு ஆகியோர் தங்களுக்கு ஏற்றவாறு வாழ்ந்திருக்கிறார்கள். எல்லாரும் பார்க்க வேண்டிய படம் இது!” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!