சென்னை : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. நீட்-க்கு விண்ணப்பிக்கும் போது அடிக்கடி ‘Error’ ஏற்படுவதால் ஆசிரியர்களே தடுமாறுவதாகவும், இதனால் மாணவ மாணவிகள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் தகவல் வெளியானது.
இதனால், பயிற்சி எடுத்த பிறகு நீட் தேர்வுக்கு விருப்பமுள்ள மாணவர்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.