இஸ்ரேல் : ஈரான் மீது வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் தற்போது உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்களை மூடி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த அறிவிப்பு வரும் வரையில், உலகம் முழுவதும் உள்ள தூதரகங்கள் செயல்படாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலியர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை உடனே தூதரகங்களுக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் பெரும் தாக்குதல் நடத்தியபோதும், இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே இஸ்ரேல் – ஈரான் இடையே பெரும் போர் வெடிக்கும் எனக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் தொடங்கிய தாக்குதல், ஈரானை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு முக்கிய காரணம் இஸ்ரேலின் விமான தாக்குதல் அல்ல, டிரோன் தாக்குதல் தானாம்.
ஈரானுக்குள் தாக்குதல் நடத்தவேண்டிய இடங்களை குறித்துவைத்து, அந்த இடங்களுக்கு அருகே பல நாள்களுக்கு முன்பே டிரோன்கள், வெடிமருந்துகளை இஸ்ரேல் உளவாளிகள் தயாராக வைத்துவிட்டனர். ஈரானுக்குள் இருந்தே திடீரென துல்லியமாக தாக்குதல் வந்ததால், அந்நாடு திணறிவிட்டதாம்.