ஜெர்மனியில் 450-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெர்லின் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் செய்திகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
