By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ‘மெட்டா’ நிறுவனம்!
    2 Min Read
    ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி: விதிகளை மீறிய எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளத்திற்கு ₹4.48 கோடி அபராதம்!
    1 Min Read
    மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் சீனாவில் உயிரிழப்பு… ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்
    1 Min Read
    ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம்
    1 Min Read
    டிரம்ப் குடும்பத்தினருக்கு நிரந்தரமாக வருமான வரி தணிக்கையிலிருந்து விலக்கு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
    டெல்லியில் போக்குவரத்து சங்கங்கள் 3 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம்
    1 Min Read
    நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி: தண்ணீர் தாகத்தில் பேருந்தை வழிமறித்த குரங்குகள்!
    1 Min Read
    பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு: தரையிறங்கியபோது ஏர் இந்தியா விமானம் விபத்து
    1 Min Read
    டெல்லியில் கடுமையான கோடை வெயில்: மயங்கி விழுந்த மாணவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் மே 27 வரை கனமழைக்கு வாய்ப்பு
    2 Min Read
    ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசி: எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல்!
    1 Min Read
    டெண்டர் முறைகேடு எதிரொலி: மின்வாரிய உயர் அதிகாரிகள் 2 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
    1 Min Read
    எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி?
    1 Min Read
    உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய இயற்கை தீர்வுகள்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ‘மெட்டா’ நிறுவனம்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ‘மெட்டா’ நிறுவனம்!
உலகம்

8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ‘மெட்டா’ நிறுவனம்!

Nagaraj
Last updated: May 22, 2026 5:58 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுடெல்லி: ஐடி துறையில் மீண்டும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது ‘மெட்டா’ நிறுவனம்!

மெட்டா ஊழியர்​களுக்கு நேற்​றைய தினம் ‘இன்று அனை​வரும் வீட்​டில் இருந்தே பணிபுரி​யுங்​கள்’ என்ற ஒரு சாதாரண உத்​தர​வுடன் தொடங்​கியது. அமெரிக்​கா, பிரிட்​டன் உள்​ளிட்ட பல்​வேறு பிராந்​தி​யங்​களில் உள்ள ஊழியர்​கள் அலுவலகத்​திற்கு வர வேண்​டாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்​தது. இதனால் அவற்​றின் வளாகங்​களில் மக்​கள்​கூட்​டம் இல்​லை; அலு​வலக அறை​களில் அரட்​டைகள் இல்​லை; வளாகத்தின் தாழ்​வாரங்​களில் ஊழியர்​களின் பரபரப்​பான நடமாட்​ட​மும் இல்​லை.

அதன் தொடர்ச்​சி​யாக, ஊழியர்​களின் மின்​னஞ்​சல் பெட்டிகளுக்கு அடுத்​தடுத்து செய்​தி​கள் வரத் தொடங்​கின. மெட்டா பிளாட்​பார்ம்ஸ் நிறு​வனம், தனது ஒட்​டுமொத்​தப் பணியாளர்​களில் சுமார் 10 சதவீதம் ஊழியர்களை (8,000) பணிநீக்​கம் செய்​யும் நடவடிக்​கை​யைத் தொடங்​கி​யுள்​ளது. இதற்கான முதல் அறி​விப்​பு, சிங்​கப்​பூரில் உள்ள அதன் முக்​கிய மையத்​திலிருந்து வெளி​யானது.

சிங்​கப்​பூர் உள்​ளூர் நேரப்​படி அதி​காலை 4 மணிக்கு (இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 1:30 மணி) பணிநீக்​கம் செய்​யப்​பட்ட ஊழியர்களுக்கு மின்​னஞ்​சல்​கள் அனுப்​பப்​பட்​ட​தாக ‘புளூம்​பெர்க்’ செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. உலகளா​விய நேர மண்டலங்களுக்கு ஏற்ப, அடுத்​தடுத்த கட்​டங்​களாக இந்த பணிநீக்க அறி​விப்​பு​கள் ஊழியர்​களுக்கு அனுப்​பப்​பட்டு வருகின்றன. முதலில் வீட்​டில் இருந்தே பணி செய்ய உத்​தர​விட்​டு, அதைத் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்​கையை மேற்​கொண்ட மெட்​டா​வின் இந்த உத்தி ஐடி உலகில் பெரும் விவாதத்​தைக் கிளப்பி​யுள்​ளது.

இதன் பின்​னணி​யில் செயற்கை நுண்​ணறிவு மறுசீரமைப்பு நடவடிக்​கைகள் இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. இந்த பணிநீக்க நடவடிக்​கைக்கு முன்பு மெட்டா நிறு​வனத்​தில் சுமார் 78,000 ஊழியர்​கள் பணி​யாற்றி வந்​தனர். இந்த நிலை​யில்​தான் தற்போது ஆயிரக்​கணக்​கானோர் பணிநீக்​கம் செய்​யப்​பட்டு வருகின்​றனர்; மேலும் பல ஆயிரம் ஊழியர்​கள் வேறு பிரிவுகளுக்கு மாற்​றப்​பட்டு வரு​கின்​றனர்.

இதுகுறித்து அந்​நிறு​வனத்​தின் முதன்மை மனிதவள அதி​காரி ஜானெல்லே கேல் ஊழியர்​களுக்கு அனுப்​பி​யுள்ள செய்திக்குறிப்பில் தெரி​வித்​துள்​ள​தாவது: 7,000 ஊழியர்​கள் செயற்கை நுண்​ணறிவு சார்ந்த புதிய குழுக்​களுக்கு மாற்றப்படுவார்​கள். காலி​யாக இருந்த சுமார் 6,000 பணியிடங்கள் முடக்​கப்​பட்​டுள்​ளன.

மேலாண்மை நிலைகளில் உள்ள அதி​காரி​களின் அடுக்​கு​கள் குறைக்​கப்​படு​கின்​றன. மேலும், குறைந்த எண்​ணிக்​கையி​லான ஊழியர்​களைக் கொண்ட சிறிய குழுக்​கள் மூலம், மிக விரைவாகவும் தன்​னா​திக்​கத்​துட​னும் செயல்​படக்​கூடிய எளிய நிறு​வனக் கட்​டமைப்பை நோக்கி நாம் நகர்ந்​துள்​ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

You Might Also Like

ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி: விதிகளை மீறிய எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்’ தளத்திற்கு ₹4.48 கோடி அபராதம்!

மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் சீனாவில் உயிரிழப்பு… ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்

ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம்

டிரம்ப் குடும்பத்தினருக்கு நிரந்தரமாக வருமான வரி தணிக்கையிலிருந்து விலக்கு!

பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்தித்து ஆலோசனை

TAGGED:artificial intelligenceEmployment NewsIT CompaniesMeta LayoffsTechnologyஐடி நிறுவனங்கள்கார்ப்பரேட் செய்திகள்செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம்மெட்டா பணிநீக்கம்வேலைவாய்ப்பு செய்திகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?