By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
    கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு
    1 Min Read
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
    ஈரான் போர்… இந்தியாவில் எல்பிஜி எரிவாயு பயன்பாடு சரிவு
    1 Min Read
    வால்பாறை விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர் இரங்கல்
    1 Min Read
    இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்… ஈரான் தூதருக்கு நோட்டீஸ்
    1 Min Read
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்… தெரிந்து கொள்வோம்
    1 Min Read
    சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்ட கற்றாழையின் நன்மைகள்
    2 Min Read
    குறட்டை விடுகிறீர்களா? எளிமையான தீர்வுகள் உங்களுக்காக!!!
    1 Min Read
    இடுப்பு வலி குணமாக முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல்… அவசரநிலை பிரகடனம் ஆனது
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல்… அவசரநிலை பிரகடனம் ஆனது
உலகம்

அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல்… அவசரநிலை பிரகடனம் ஆனது

Nagaraj
Last updated: January 27, 2026 8:08 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

வாஷிங்டன்: அட்லாண்டிங் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று புதிதாக உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் தாக்கி வரும் இந்த புயலுக்கு பெர்ன் என பெயர் வைத்து அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணித்து வருகிறது.

அமெரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இந்தாண்டு பிப்ரவரி இறுதிவரை குளிர்காலம் இருக்கும். கடந்தாண்டு டிசம்பரில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி அங்கு பனிப்பொழிவு குறைந்தபாடில்லாமல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அட்லாண்டிங் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று புதிதாக உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் தாக்கி வரும் இந்த புயலுக்கு பெர்ன் என பெயர் வைத்து அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணித்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் தொடங்கி வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வானிலை மையம் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையில் உள்ள 14 கோடி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு தடைவிதித்துள்ளது.

பனிப்புயலின் கோர தாண்டவம் காரணமாக தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா, மாரிலாந்து, கென்டக்கி உள்ளிட்ட 12 மாகாணங்களுக்கு அவசரநிலை பிரகடனம் அறிவித்து அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

பெர்ன் பனிப்புயல் காரணமாக அதிகப்பட்சமாக பென்சில்வேனியா மற்றும் ஹட்சன் பள்ளத்தாக்கில் 63 செ.மீ வரை பனிக்கொட்டியது. அந்த நாட்டின் மிக முக்கிய நகரமான நியூயார்க்கில் 25 செ.மீ வரை பனி கொட்டியது. இதனால் அந்த நாட்டின் பல முக்கிய இடங்கள் வெள்ளை போர்வை போர்த்தியதுபோல காட்சியளித்தன.

இந்த பனிப்பொழிவு காரணமாக அந்த நாட்டில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. பனிப்புயல் காரணமாக வெளிநாடுகள் மற்றும் உள்ளூர்களுக்கு இயக்கப்படவிருந்த 11,500 விமானங்கள் ரத்தாகின. இந்த பனிப்புயல் காரணமாக பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் அங்கு உயிரிழந்தனர்.

ஆபத்தான குளிர், கடும் உறைபனி, பனிமழை மேலும் பல நாட்கள் நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. அமெரிக்காவில் முன் எப்பொதும் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு நிலவுதால் அங்கு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

You Might Also Like

தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு

8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு

இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்

கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு

அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்

TAGGED:cancellationsdangerous coldflightsPeople affectedsnowfallUSAஅமெரிக்காஆபத்தான குளிர்பனிப்பொழிவுமக்கள் பாதிப்புரத்துவிமானங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

அசத்தலான சுவையில் ரவை ரொட்டி செய்வது எப்படி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?