By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லெபனான் – இஸ்ரேல் புதிய போர் நிறுத்தம்; டிரம்ப் அறிவிப்பு
    0 Min Read
    தம்பியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வரும் 14 வயது மாணவி; நெகிழ்ச்சியூட்டும் கதை
    0 Min Read
    அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை; இஸ்ரேல் – லெபனான் உறவில் புதிய திருப்பம்
    0 Min Read
    டிரம்பின் ரூ.17,100 கோடி நிதி திட்டம் நிறுத்தம்; சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு
    1 Min Read
    அமெரிக்காவில் 30 இந்திய லாரி டிரைவர்கள் கைது; நாடு கடத்த நடவடிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கேரளாவின் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்: முதல்வர் சதீசன் கவலை
    0 Min Read
    உச்ச நீதிமன்ற புதிய பெண் நீதிபதியாக மோகனா நியமனம்
    1 Min Read
    கணவர் மீது ஆசிட் வீசிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
    0 Min Read
    மேலும் 114 ரஃபேல் விமானங்கள்: இந்தியாவின் விமானப்படை பலம் அதிகரிப்பு
    1 Min Read
    மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியை கடந்தது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வீட்டு வரிக்காக லஞ்சம்; மாநகராட்சி ஊழியர் கைது
    1 Min Read
    கேரளாவில் ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை துவக்கம்? இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்
    1 Min Read
    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
    2 Min Read
    லால்குடியில் விக்கிரம சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு
    1 Min Read
    ஸ்வச்சதா துாய்மை இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய தெற்கு ரயில்வேக்கு விருது
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வெனிசுலாவில் இடைக்கால அதிபர் பதவியேற்பு… அவசர நிலை பிரகடனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > உலகம் > வெனிசுலாவில் இடைக்கால அதிபர் பதவியேற்பு… அவசர நிலை பிரகடனம்
உலகம்

வெனிசுலாவில் இடைக்கால அதிபர் பதவியேற்பு… அவசர நிலை பிரகடனம்

Nagaraj
Last updated: January 6, 2026 5:39 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

காரகாஸ்: புதிய இடைக்கால அதிபராக பதவியேற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ். தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் புதிய இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுக் கொண்டார். அதேநேரம் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால், எதிர்ப்பாளர்களை வேட்டையாட ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ப்ளோரஸ் ஆகியோரை கடந்த 3ம் தேதி அமெரிக்க ராணுவம் அதிரடியாகச் சுற்றி வளைத்து சிறைபிடித்தது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதத் தடை மீறல் வழக்கு விசாரணைக்காக அவர்கள் நியூயார்க் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, நிர்வாகத் தொடர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அந்நாட்டின் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து காரகாஸில் உள்ள நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பதவியேற்றார். இவ்விழாவில் பங்கேற்ற மதுரோவின் மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா, புதிய தலைவருக்கு தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார். பதவியேற்பு விழாவில் பேசிய டெல்சி, மதுரோ கைது செய்யப்பட்டதை ‘சட்டவிரோத ராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஆள்கடத்தல்’ எனத் கடுமையாக விமர்சித்தார்.

இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தயார் என்றும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்புக்கான திட்டங்களை வகுக்க அமெரிக்க அரசிற்கு அழைப்பு விடுத்தார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள செய்தியில், ‘வெனிசுலாவின் அதிகார மாற்றத்தை தற்போது நாங்களே கையாாள்கிறோம்; எண்ணெய் வளம் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களில் அமெரிக்காவின் முன்னுரிமைகளை ஏற்காவிட்டால் டெல்சி ரோட்ரிக்ஸ் மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும்’ என எச்சரித்துள்ளார்.

விரைவில் காரகாஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படலாம் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெனிசுலாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவசரச் சட்டத்தைப் புதிய இடைக்கால அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்தச் சட்டம் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. மதுரோ கைது செய்யப்படுவதற்கு முன்பே அவரால் கையெழுத்திடப்பட்ட இந்த உத்தரவை, இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இந்த அவசர நிலை அடுத்த 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் மற்றும் அதனை ஊக்குவித்தவர்களை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யப் பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

You Might Also Like

லெபனான் – இஸ்ரேல் புதிய போர் நிறுத்தம்; டிரம்ப் அறிவிப்பு

தம்பியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வரும் 14 வயது மாணவி; நெகிழ்ச்சியூட்டும் கதை

அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை; இஸ்ரேல் – லெபனான் உறவில் புதிய திருப்பம்

டிரம்பின் ரூ.17,100 கோடி நிதி திட்டம் நிறுத்தம்; சொந்தக் கட்சியினர் எதிர்ப்பு

அமெரிக்காவில் 30 இந்திய லாரி டிரைவர்கள் கைது; நாடு கடத்த நடவடிக்கை

TAGGED:arrestfull authorityMilitary actionSecurity ForcesUSVenezuelaஅமெரிக்காகைதுபாதுகாப்பு படையினர்முழு அதிகாரம்ராணுவ நடவடிக்கைவெனிசுலா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விவசாயம்

தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும்

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?