கொலம்பியா: தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
கொலம்பியாவில் உள்ள பொகோட்டா என்ற பகுதி அருகே சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது சரியாக உள்ளூர் நேரப்படி காலை 9:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் எதிரொலி மத்திய கொலம்பியா முழுவதும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.