அமெரிக்கா: நிரந்தரமாக விலக்கு… அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் குடும்பத்தினா், நிறுவனங்கள் ஆகியவற்றின் கடந்த கால வரி ஆவணங்களை அந்நாட்டு வருமான வரித் துறை (ஐஆா்எஸ்) இனி எந்தக் காலத்திலும் தணிக்கை செய்யக் கூடாது என்று அந்நாட்டு நீதித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் குடும்பத்தினா், நிறுவனங்கள் ஆகியவற்றின் கடந்த கால வரி ஆவணங்களை அந்நாட்டு வருமான வரித் துறை (ஐஆா்எஸ்) இனி எந்தக் காலத்திலும் தணிக்கை செய்யக் கூடாது என்று அந்நாட்டு நீதித் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடா்பாக அமெரிக்க பொறுப்பு அட்டா்னி ஜெனரல் டாட் பிளான்ச் கையொப்பமிட்ட ஒரு பக்க ஆவணத்தை அவரின் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி, கடந்த திங்கள்கிழமை வரை தாக்கல் செய்யப்பட்ட டிரம்ப்பின் வரி வருமானங்கள் மற்றும் இது தொடா்பான அனைத்து விவகாரங்களிலும் ஐஆா்எஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்ப் தனது வரி ஆவணங்கள் கசிந்தது தொடா்பாக ஐஆா்எஸ் மீது தொடுத்திருந்த 1,000 கோடி டாலா் வழக்கைத் திரும்பப் பெற்ன் தொடா்ச்சியாக, கடந்த திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட சமரச ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உத்தரவு முன்னெப்போதும் இல்லாத ஒன்று; பொதுமக்களின் வரி விவரங்களைச் சரிபாா்க்கும் ஐஆா்எஸ்-இன் அடிப்படை அதிகாரத்தையே இது கட்டுப்படுத்துவதாக விமா்சகா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.