உக்ரைன்: அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் உக்ரைன் ஜெலன்ஸ்கி.
ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நடைபெற உள்ள இரண்டாவது உலக அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், ஒற்றுமையே அமைதிக்கு வழிவகுக்கும் என்றும், போரை முடிவுக்கு கொண்டுவர அனைத்து நாடுகளின் கூட்டு நடவடிக்கை அவசியமானது என்றும் கூறினார்.
மேலும், உலக அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்