By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    துபாய் விமான நிலையம் அருகே விழுந்த ஈரானின் டிரோன்கள்
    1 Min Read
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்க மறக்காதீங்க!!
    1 Min Read
    ரெடிமேட் உணவுகளை சாப்பிடும் முன் யோசிங்க!
    1 Min Read
    அதிகளவு உடற்பயிற்சியை அதிக நேரம் செய்பவர்களா நீங்கள்… அப்போ இது உங்களுக்காக!!!
    1 Min Read
    புயல் எச்சரிக்கையை முன்கூட்டியே கண்டறிய ஏஐ தொழில்நுட்பம்… மத்திய அமைச்சர் தகவல்
    1 Min Read
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்
    2 Min Read
    உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பேயன் வாழைப்பழம்!
    2 Min Read
    நுங்கு-ல் உள்ள மருத்துவக்குணங்கள்… இனி இதுதான் நமக்கு தேவை!!!
    1 Min Read
    உங்களின் கம்பீரத்தை உயர்த்த சரியான ஆடைகளை அணியுங்கள்…
    1 Min Read
    கால்களுக்கு இயற்கை அழகு தரும் கொலுசு… எப்படி எடுப்பது?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முதலீடுகளுக்கான முதல் முகவரி தமிழ்நாடு… அமைச்சர் பெருமிதம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > முதலீடுகளுக்கான முதல் முகவரி தமிழ்நாடு… அமைச்சர் பெருமிதம்
அரசியல் செய்திகள்

முதலீடுகளுக்கான முதல் முகவரி தமிழ்நாடு… அமைச்சர் பெருமிதம்

Nagaraj
Last updated: August 7, 2025 3:27 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தமிழ்நாடு முதலீடுகளுக்கான முதல் முகவரி ஆகியுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முன்பு 9.69% என்று மதிப்பிடப்பட்ட 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இன்று 11.19% என்று திருத்தி மத்திய அரசின் புள்ளிவிவரத்துறை மதிப்பிட்டுள்ளது.

இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெற்றிராத அபரிமிதமான பெரும் வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரண்டு இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு – சீரான கொள்கைநெறி வழியில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளில் ஒன்று, மணிமகுடத்தில் மற்றொரு பொறித்த வைரக்கல்லாகத் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது.

ஏற்கனவே நாம் சொல்லிருக்கக்கூடிய 9.69% என்கிற அந்த GSDP உடைய இலக்கையும் தாண்டி, இன்றைக்கு 11.8% பொருளாதார குறியீடுகள் உயர்ந்து இருக்கின்றன. ஏறத்தாழ 12% நெருங்கி வரக்கூடிய வாய்ப்பை பெற்று இருக்கிறோம்.

நம்முடைய சாதனையை நாம்தான் முறியடிக்க முடியும் என்கிற வகையில் 9.69% என்ற ஒற்றை இலக்கத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி சதவீதத்தை இன்றைக்கு இரட்டை இலக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிற மகத்தான சாதனையை முதலமைச்சருடைய ஆட்சி உருவாக்கியிருக்கிறது.

இந்த இரட்டை இலக்கத்திலே பொருளாதார ஆட்சியை உருவாக்குவது, Real terms-ல் வளர்ச்சி பெறுவது என்பது கலைஞர் அவர்கள் ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது 13% வளர்ச்சியை நாம் பெற்று இருந்தோம். அதன்பின் 14 வருடத்திற்கு பிறகு இன்றைக்கு முதலமைச்சரின் ஆட்சியில்தான் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற்று இருக்கிறது.

இந்திய அளவில் பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடுதான் இந்த இரட்டை இலக்க வளர்ச்சியை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. எனவே இந்த வளர்ச்சி என்பது 2030ஆம் ஆண்டு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்பதற்கு திடமான வழியை வகுத்து தந்துள்ளது.

முதலமைச்சரின் சீரிய முயற்சிகளிலான தொழில் முதலீடுகள், தொழில் முதலீடுகள் மூலம் கிடைத்த வேலை வாய்ப்புகள் என அனைத்தின் காரணமாக இந்தப் பொருளாதார வளர்ச்சி அமைந்திருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான முழு சூழ்நிலைகளையும் நாம் உருவாக்கி இருக்கிறோம். நாம் முதலீடுகளுக்கான முதல் முகவரி தமிழ்நாடு என்கிற அளவில் மாண்புமிகு முதலமைச்சர் முயற்சியின் காரணமாக ஈர்க்கப்பட்டு இருக்கக்கூடிய ஏராளமான முதலீடுகளே இந்தப் பெருமையைத் தந்து இருக்கிறது.

நிதி நிலைமையை நாம் சரியாகக் கையாண்டு இருக்கிறோம்; நாட்டின் பொருளாதாரத்தை நாம் உயர்த்தி இருக்கிறோம். கடன் வாங்குகிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கிறார்கள். ஆனால் வரைமுறைகளுக்கு உட்பட்டு முதலீடுகளுக்காக நாம் வாங்குகின்ற கடன்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. ஒன்றிய அரசு நமக்கு உரிய நிதிகளை விடுவிக்காத போதிலும், நமது முதலமைச்சரின் கூரிய நோக்கிலான வழிகாட்டுதல் மூலம் இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

You Might Also Like

தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆடையான புடவையில் இத்தனை வகைகளா?

காங்கிரசிற்கும், திமுகவிற்கும் ஒரே கொள்கையா? எடப்பாடி பழனிசாமி கேள்வி

திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்… பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கெஞ்சி கூட்டணி வைத்துள்ள திமுக… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

TAGGED:Chief MinisterDevelopmentEconomyMinister Southern GovernmentTamil Naduஅமைச்சர் தென்னரசுதமிழ்நாடுபொருளாதாரம்முதலமைச்சர்வளர்ச்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

மீனாட்சி மருத்துவமனையி நடத்திய ஒற்றுமையை ஊக்குவிக்கும் இப்தார்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?