By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை
    1 Min Read
    வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்
    1 Min Read
    குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்
    1 Min Read
    தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்
    2 Min Read
    உச்சம் காட்டும் வெயில்… அச்சத்தில் வீட்டில் முடங்கும் மக்கள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வரும் 19ம் தேதி முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > வரும் 19ம் தேதி முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்
அரசியல் செய்திகள்

வரும் 19ம் தேதி முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்

Nagaraj
Last updated: November 16, 2025 6:14 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

பீகார்: பீகாரில் 10-வது தடவையாக நிதிஷ்குமார் வரும் 19-ந்தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

243 உறுப்பினா்களை கொண்ட பீகாா் சட்டசபைக்கு நடைபெற்ற தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

இந்த கூட்டணியில் 89 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 85 தொகுதிகளும், லோக் ஜனசக்திக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) 19 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 5 தொகுதிகளும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 4 இடங்களும் கிடைத்தன.

ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் ‘இந்தியா’ கூட்ட ணிக்கு பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் 34 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம் 25, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1 இடங்களை கைப்பற்றின.

தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும், ஐ.ஐ.பி. ஒரு இடத்தையும் பிடித்தன.

தேர்தலில் பா.ஜ.க.வைச் சோ்ந்த துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்திரி, விஜய் குமாா் சின்கா உள்பட மாநில மந்திரிகள் 25 போ் (பா.ஜ.க. 15, ஐக்கிய ஜனதா தளம் 10) மீண்டும் போட்டியிட்டனா். இவா்களில், ஐக்கிய ஜனதா தளத்தின் சுமித்குமாா் சிங் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனா்.

இதற்கிடையே பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டெல்லியிலும், பாட்னாவிலும் பேச்சுவார்த்தையை தொடங்கின. பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

நிதிஷ்குமாரை மீண்டும் முதல்-மந்திரியாக்க பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சம்மதித்துள்ளன. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, “பீகார் மக்கள் நல்ல ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். மாநில மக்கள் நிதிஷ்குமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்” என்றார்.

புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக நிதிஷ்குமார் நாளை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் பிறகு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்படுவார். அதை தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க அவர் கவர்னரை சந்தித்து உரிமை கோருவார்.

நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவியேற்கும் விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார். 19-ந்தேதி சர்வ அமாவாசை (நல்ல நாள்) என்பதால் அன்றே அவர் பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும். தற்போது அமைய இருக்கும் புதிய ஆட்சியில் கூட்டணியில் உள்ள மற்ற 3 கட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்திரிசபையில் இடம் பெறுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு தெரிவித்தார்.

You Might Also Like

தொகுதி மறுவரையறை மசோதா இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

நந்தனத்தில் இறுதி கட்ட பிர்சசாரம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்

பாபநாசம் தொகுதி சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம்

மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு

தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு

TAGGED:Chirag PaswanNew GovernmentNitish KumarPatnaswearing-in ceremonyசிராக் பஸ்வான்நிதிஷ்குமார்பதவியேற்பு விழாபாட்னாபுதிய ஆட்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?