பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ரெட்டவயல் கிராமத்தில், சேதுபாவாசத்திரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ பாக முகவர்கள், டிஜிட்டல் முகவர்கள், வாக்குச்சாவடி உதவியாளர்கள், கிளைச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், ஒன்றியச் செயலாளர் குழ.செ.அருள்நம்பி தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான நா.அசோக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
இதில், இளைஞர் அணி அமைப்பாளர் முருகேசன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீரக்குடி ராமமூர்த்தி, ஐ.டி
விங்க் ராஜவேல், கிளைச் செயலாளர்கள் பழனி, குமரேசன், பிரதிநிதிகள் நடராஜன், பழனி, சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், “ஒவ்வொரு நூறு வாக்காளர்களுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள், தங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள வாக்காளர்களை தினமும் சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்து கூறி, அவர்களது வாக்குகளை திமுகவுக்கு பெற்று தந்து, மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினை ஆட்சியில் அமர்த்த பாடுபட வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.