By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    0 Min Read
    டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு
    1 Min Read
    பாடகி கெனிஷாவுக்கு துபாய் நீதிமன்றம் ரூ. 1.30 லட்சம் அபராதம் விதிப்பு
    1 Min Read
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம்
    1 Min Read
    ட்விஷா சர்மா மரணம்: மாமியாரை கைது செய்த சிபிஐ
    1 Min Read
    ஹேப்பி லேண்ட் பூங்காவில் ராட்டினம் முறிந்து விபத்து: 5 பேர் படுகாயம்
    1 Min Read
    நீட் மறுதேர்வை நேரடியாக கண்காணிக்கும் பிரதமர் அலுவலகம்!
    1 Min Read
    டெல்லியில் பலத்த மழை: 521 விமான சேவைகள் பாதிப்பு!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கத்திரி வெயிலின் கடைசி நாளிலும் கொதித்த தமிழகம்… சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி!
    1 Min Read
    36 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பளித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஓய்வு!
    1 Min Read
    தொழிற்சாலைகள், வாகனப்புகையால் தமிழகத்தில் அதிகரிக்கும் காற்று மாசு!
    1 Min Read
    10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 4 கடைசி நாள்!
    1 Min Read
    மின்நுகர்வோர் கவனத்திற்கு! புதிய சர்வருக்கு மாறும் தரவுத்தளம்: இன்று ஆன்லைன் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
தமிழகம்

தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

Nagaraj
Last updated: December 19, 2025 10:56 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: புதுடெல்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், அகில இந்திய ஒருங்கிணைந்த மலைப்பயிர்கள் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம், நம்பிவயல், நடுவிக்கோட்டை, உஞ்சியவிடுதி, கிராம பட்டியலின தென்னை விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

மேலும், தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய ஒரு நாள் நேரடி நிலையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதன்மையர் முனைவர் க.வெங்கடேசன், (தோட்டக்கலை), அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் (மலைப்பயிர்கள்) முதன்மை விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி.அகஸ்டின் ஜெரால்டு ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கை.குமணன் வரவேற்று பேசுகையில், தற்போது உள்ள தென்னை சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் சமூக பொருளாதார நிலை முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இணைப்பேராசிரியர் (பயிர் நோயியல்) முனைவர் ம.சுருளிராஜன், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றியும், உதவிப்பேராசிரியர் (பூச்சியியல்) முனைவர் நா.முத்துக்குமரன்
தொழில்நுட்ப உரையாற்றி, செயல் விளக்கங்ககளை செய்து காட்டினர்.

இணைப்பேராசிரியர் (உழவியல்) முனைவர் ந.செந்தில்குமார் ஒருங்கிணைந்த பயிர் பண்ணையம் மூலம் லாபகரமான தென்னை சாகுபடி பற்றி விளக்கம் அளித்தார்.

இந்நிகழ்ச்சியில், தென்னைக்கு பூச்சி மற்றும் நோய் தடுப்பு முறைகள் மற்றும் தென்னை டானிக் செலுத்துதல் பற்றிய செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. தென்னை விவசாயிகளின் கேள்வி பதில், முன்னோடி விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பரிமாற்றம் போன்றவை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின், நிறைவாக பட்டியலின தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தேவையான பண்ணை இடுபொருட்களை இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் வழங்கினார்.

இணைப்பேராசிரியர் (பயிர் நோயியல்) முனைவர். .சுருளிராஜன், இளநிலை ஆராய்ச்சியாளர், அ. வள்ளிநாயகம், வேளாண் உதவி அலுவலர்கள் பி.விஜயலலிதா, பி.சுந்தரி ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

You Might Also Like

டிரம்ப் போல தோற்றமளித்ததால் தப்பிய எருமை மாடு

கத்திரி வெயிலின் கடைசி நாளிலும் கொதித்த தமிழகம்… சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி!

36 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பளித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஓய்வு!

தொழிற்சாலைகள், வாகனப்புகையால் தமிழகத்தில் அதிகரிக்கும் காற்று மாசு!

10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 4 கடைசி நாள்!

TAGGED:Associate ProfessorCoconut ResearchFarmfarmersinputsஇடுபொருட்கள்இணைப் பேராசிரியர்தென்னை ஆராய்ச்சிபண்ணைவிவசாயிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
வர்த்தகம்

ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?