மும்பை; ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்தி நடிகர் ஷாருக்கான் உரிமையாளர் ஆக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தபிசுர் ரகுமான் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரரை கொல்கத்தா அணியில் சேர்த்ததற்கு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் துபே கூறுகையில், “வங்கதேச வீரரை ஐபிஎல் அணியில் சேர்ப்பது நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய விஷயம். ஐபிஎல் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வீரர்களை புறக்கணிக்க வேண்டும். அந்த வீரர் மூலம் கிடைக்கும் பணம் நமது நாட்டுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தப்படக்கூடும். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியை நாடுவோம்” என்றார்.
இந்த விவகாரம் ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரங்களிலும் அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.