சென்னை: தை மாதம் பிறந்துள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.
கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிகடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
15-01-2026 மற்றும் 16-01-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
17-01-2026 முதல் 19-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
20-01-2026 மற்றும் 21-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
15-01-2026 முதல் 17-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று குறைவாக இருக்கக்கூடும்.