By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகனை மார்பில் அணைத்தப்படியே இறந்து கிடந்த தாய்
    1 Min Read
    சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?
    1 Min Read
    லாரி மீது கார் மோதி விபத்தில் தெலுங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன
    1 Min Read
    ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பூ அடை தோசை செய்து அசத்துங்கள்
    1 Min Read
    அசத்தலான சுவையில் ஐஸ் டீ செய்வது எப்படி?
    1 Min Read
    தஞ்சாவூர் 12 மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
    1 Min Read
    மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு செங்கோட்டையன் அதிரடி பதில்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு செங்கோட்டையன் அதிரடி பதில்
அரசியல் செய்திகள்

தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு செங்கோட்டையன் அதிரடி பதில்

Nagaraj
Last updated: February 28, 2026 6:14 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தவெகவில் எனக்கு மரியாதை இல்லையா? என்று தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு செங்கோட்டையன் அதிரடி பதில் அளித்துள்ளார்.

தவெகவுக்கு சென்றவர்கள் உரிய மரியாதை இல்லாததால் அதிமுகவுக்கே திரும்பி வரத் தயாராக உள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சமீபத்தில் பேசியிருந்த நிலையில், தவெக நிர்வாகி செங்கோட்டையன் அதற்கு பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக அக்கட்சியிலிருந்து கடந்த ஆண்டு இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவருக்கு தவெகவின் மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தில் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் இல்லை என அக்கட்சியை எதிர்கட்சிகள் விமர்சித்து வந்த வேளையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அதேசமயம், தவெக சார்பில் செங்கோட்டையனுக்கு பெரிய அளவிலான வரவேற்பு கொடுக்கப்பட்டது தமிழ்நாடு அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கிடையில், தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்ற கருத்துக்களும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து எழ ஆரம்பித்தன. கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் அங்கு உரிய மரியாதை கிடைக்காததால் மீண்டும், அதிமுகவுக்கே திரும்பி வரத் தயாராக இருக்கின்றனர் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசியிருக்கும் அவர், ”தேர்தல் வரட்டும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படட்டும். அப்போது, எத்தனை பேர் எங்களை நாடி வருகிறார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள். தவெக-வில் மரியாதை இல்லை என்று சொல்பவர்கள், அதிமுக-வில் எங்களுக்கு என்ன மரியாதை கொடுத்தீர்கள் என்பது அனைவரும் அறிவார். அதை நான் உதாரணம் காட்டி விளக்க வேண்டிய அவசியமில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, துரோகத்தின் மொத்த உருவமாக இருப்பவர்கள் பேசுவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை எனவும் பேசியிருக்கிறார்.

You Might Also Like

பொய் தகவல்களை உடைத்தெறிவோம்” : இ.பி.எஸ். திட்டவட்டம்

மதுரை ஸ்ட்ராங் ரூமில் 15 நிமிடங்கள் வரை திடீரென செயலிழந்த சிசிடிவி

“தவெக 200 இடங்களில் வெற்றி பெறும்” : செங்கோட்டையன் உறுதி

சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுங்கள்… வீரபாண்டியன் அறிக்கை

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிக்கும் வாக்குவாதம்

TAGGED:AIADMKbetrayalCriticismrespectSengottaiyanthavekaஅதிமுகசெங்கோட்டையன்தவெகதுரோகம்மரியாதைவிமர்சனங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?