சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட அரிசி மாவு இனிப்பு பூரியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையானவை:
பச்சரிசி – 2 தம்ளர்,
வெல்லம் – முக்கால் கிலோ,
குங்குமப்பூ – சிறிது,
எண்ணெய் – ஒரு கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு, நெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை: பச்சரிசியை களைந்து நீரை வடித்து, உலர்த்தி, மாவாக்கி, சலித்துக் கொள்ளவும். அந்த மாவில் எண்ணெய், உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிகளாக இட்டுக்கொள்ளவும்.
வெல்லத்தை பாகு காய்ச்சி, கம்பி பதம் வரும்போது, ஏலக்காய் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கி வைக்கவும். வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும், பூரிகளை போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு வெல்லப்பாகை போட்டு ஊறவிடவும். ஊறியதும், சுவையான அரிசி மாவு இனிப்பு பூரி தயார்.