தஞ்சை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் கேஸ் விலை உயர்வு காரணமாக டீ விலை உயர்வு பல டீக்கடைகள் மூடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக தமிழகத்தில் வணிக சிலிண்டர் விலை கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மேலும் சிலிண்டர்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மாற்று எரிபொருளுக்கு வணிக நிறுவனங்கள் மாறிவரும் நிலையில் கட்டுப்படுத்த முடியாததால் தஞ்சையில் ஒரு சில கடைகளில் 12 ரூபாய் விற்பனை செய்து வந்த டி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது அதே போல் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் விறகு அடுப்பு எரிக்க முடியாத காரணமாகவும் பல டீக்கடைகள் விற்பனை செய்ய முடியாமல் விற்பனை நிறுத்தி உள்ளன வணிகர்கள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.