By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியுள்ள நித்யா ராமன்
    2 Min Read
    மிசோரம் எல்லை கிராமத்துக்குள் அகதிகள் வருகை அதிகரிப்பு
    1 Min Read
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வங்கி மோசடியில் ஈடுபட்ட நபர்… இந்தியா அழைத்து வந்தது சிபிஐ
    1 Min Read
    கேரளாவில் கிணற்றில் இறங்கி தூர் வாரிய பஞ்சாயத்து பெண் உறுப்பினர்
    1 Min Read
    மதரஸாவில் பயோமெட்ரிக் வருகைப் பதிவில் முறைகேடு
    1 Min Read
    ஆயிரம் கார்கள் திருடிய 10 பேர் கைது; 31 கார்கள் பறிமுதல்
    2 Min Read
    பால்டா தொகுதியில் வரும் 21-ம் தேதி மறு தேர்தல் அறிவிப்பு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தஞ்சையில் இன்று ஆரோக்கிய நடைப்பயிற்சி
    1 Min Read
    உடல் எடையை குறைக்க உதவும் மாற்று உணவுகள்
    2 Min Read
    முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்க இதோ பயனுள்ள தீர்வு
    2 Min Read
    கற்பூரத்தின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்
    0 Min Read
    உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் தண்ணீர்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தவெகவின் 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு… எதற்கு தெரியுங்களா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தவெகவின் 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு… எதற்கு தெரியுங்களா?
அரசியல் செய்திகள்

தவெகவின் 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு… எதற்கு தெரியுங்களா?

Nagaraj
Last updated: March 13, 2026 6:25 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: என்டிஏ கூட்டணிக்கு த.வெ.க. செல்ல 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் ெளியாகி உள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் கட்சித் தொடங்கிய அடுத்த இரண்டு மாதங்களிலேயே இடைத்தேர்தல் வந்தது. ஆனால் தவெக அத்தேர்தலில் போட்டியிடவில்லை. தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியில்லை. இதனைத்தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு, தனித்தே போட்டி என கட்சியின் தலைவர் விஜய் கூறினார்.

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையொட்டி நாளடைவில், தனித்தே போட்டி எனக் கூறியிருந்த தவெக, சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியாக தகவல்கள் வெளியானது. அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே அக்கட்சியின் தலைவரும் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு எனக் கூறியிருந்தார்.

இதனால் தவெக கூட்டணியோடு போட்டியிட விரும்புவது தெளிவானது. ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டின் பழைய கட்சிகள் எதுவும் தவெகவுடன் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டவில்லை. அதிமுகவிற்கு விருப்பம் இருந்தாலும், தவெகவாக வந்து பேசவேண்டும் என எதிர்பார்த்தது. ஆனால் தவெக பக்கமோ விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற நிலைப்பாடு இருந்தது. இதனால் இருதரப்பும் எந்த பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கவில்லை.

இதனிடையே விஜய் திமுகவைப்போல அதிமுகவையும் விமர்சிக்க தொடங்கினார். இதனால் அந்தப் பேச்சு அப்படியே நின்றது. மேலும் கொள்கை எதிரி எனக்கூறிய பாஜக, அதிமுக கூட்டணியில் இருப்பதாலும் இந்த பேச்சு கைவிடப்பட்டது. இச்சூழலில் கடந்த சில நாட்களாக பாஜக விஜய்யை கூட்டணியில் இணைக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக (சிபிஐ, ஜன நாயகன் விவகாரம் மூலம்) தவெக நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தவெகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 132 மாவட்ட செயலாளர்களில் 120 பேர் பங்கேற்றதாகவும், 98 மாவட்ட செயலாளர்கள் என்டிஏ கூட்டணிக்கு செல்ல ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

You Might Also Like

வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் விளைவிக்க திட்டம்…தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கையில்லை: எம்.பி., மாணிக்கம் தாகூர் விமர்சனம்

பொய் தகவல்களை உடைத்தெறிவோம்” : இ.பி.எஸ். திட்டவட்டம்

மதுரை ஸ்ட்ராங் ரூமில் 15 நிமிடங்கள் வரை திடீரென செயலிழந்த சிசிடிவி

“தவெக 200 இடங்களில் வெற்றி பெறும்” : செங்கோட்டையன் உறுதி

TAGGED:98 district secretaries98 மாவட்ட செயலாளர்கள்NDA alliancesupportThawekaVijay's decisionஆதரவுஎன்டிஏ கூட்டணிதவெகவிஜய் முடிவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

தஞ்சையில் இன்று ஆரோக்கிய நடைப்பயிற்சி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?