தவெகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு முன்னாள் அமைச்சர் Sellur K. Raju மறுப்பு தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், “ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க” என்று கிண்டலாக பதிவிட்ட அவர், தான் என்றும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில்தான் இருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், புரட்சித் தலைவர் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே தனது அரசியல் பாதை என்றும் தெரிவித்துள்ளார்.