தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ‘தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா”என்னும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு வண்ண கோலத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்னும் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு வண்ண கோலத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று பார்வையிட்டார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தஞ்சாவூர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பதனை உறுதி செய்யும் பொருட்டு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல். கேரட் மிளகாய், தேங்காய், சுண்டைக்காய், நெல்லிக்காய், உப்பு மற்றும் மலர்களைக்கொண்டு “தேர்தல் திருவிழா- தமிழ்நாட்டின் பெருவிழா என்ற கருத்தினை மையமாகக் கொண்டு வண்ண கோலங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வினை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் அருண்மொழி ஆகியோர் பார்வையிட்டனர்.