பாகிஸ்தான்: அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது.
அமெரிக்க – ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது. அமெரிக்க, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் போரிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒத்துக்கொண்டதால் அமெரிக்கா, இஸ்ரேல் உடன் 2 வாரம் போர் நிறுத்தம் நேற்று ஏற்பட்டது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால், ஈரான் மீது இதுவரை இல்லாதவகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக நிலவும் சிக்கல்களைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உயர்மட்டப் பேச்சுவார்த்தைக் குழுவை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைக்கிறார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார்.
இந்தக் குழுவில் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்