தஞ்சாவூர்: எனது பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் புகைப்படம் விசிட்டிங் கார்டு வாக்குபதி எந்திரம் ஆகியவை சென்னையில் கைப்பற்றப்பட்டது குறித்து வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்
எனது 50 ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையில் நான் விசிட்டிங் கார்டு பயன்படுத்தியது கிடையாது , எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் யார் என கண்டுபிடிக்க வேண்டும்
தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் அளிக்க உள்ளதாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.