By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி
    1 Min Read
    மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி… மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து
    1 Min Read
    நியூயார்க்கில் நடைபெற்ற ‘மெட் காலா’ நிகழ்ச்சி..!
    1 Min Read
    லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கியுள்ள நித்யா ராமன்
    2 Min Read
    மிசோரம் எல்லை கிராமத்துக்குள் அகதிகள் வருகை அதிகரிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திரைப்பட தணிக்கை வாரியத்தின் புதிய தலைவராக சஷி சேகர் வேம்பதி நியமனம்
    1 Min Read
    தொடர் விடுப்பு… விளக்கம் கொடுக்காத 51 அரசு டாக்டர்கள் பணிநீக்கம்
    1 Min Read
    சந்தோசமான வாழ்க்கை என்றால் என்ன?
    2 Min Read
    மனைவியின் மனதில் இடம் பிடிக்க சில விஷயங்களை விட்டு கொடுத்து தான் ஆக வேண்டும்!
    2 Min Read
    பெண்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் விஷயங்கள்!!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்ட சுண்டைக்காய்
    1 Min Read
    ஆரோக்கியமான பெண்களுக்கு கூட பயமே நோயாக மாறுகிறது
    1 Min Read
    பற்சொத்தை உள்பட பல்வேறு பல் பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி ?
    2 Min Read
    கொழுப்பை குறைக்கும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பிரக்கோலி..!
    1 Min Read
    வீட்டில் விளக்கேற்றும் போது எதை செய்ய வேண்டும்! எதை செய்யக்கூடாது!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மதச்சார்பற்ற தன்மையை காக்கவே தவெகவிற்கு ஆதரவு… காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > மதச்சார்பற்ற தன்மையை காக்கவே தவெகவிற்கு ஆதரவு… காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம்
அரசியல் செய்திகள்

மதச்சார்பற்ற தன்மையை காக்கவே தவெகவிற்கு ஆதரவு… காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம்

Nagaraj
Last updated: May 7, 2026 4:55 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தமிழகத்தின் மதச்சார்பற்ற தன்மையை காக்கவே தவெக-விற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் விளக்கம் அளித்துள்ளர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பது குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தை காங்கிரஸ் ஆதரிப்பது குறித்துச் சில விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, பதவி ஆசைக்காகவும் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் சிலர் முதுகில் குத்திவிட்டதாக கூறுவதை இந்திய தேசிய காங்கிரஸ் முற்றிலுமாக மறுக்கிறது.

தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பல்வேறு அரசியல் அழைப்புகள் எங்களுக்கு வந்ததை நாடறியும். இருப்பினும், மதவாத சக்திகளுக்கு எதிராக “இந்தியா” கூட்டணியில் பயணிப்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெற காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் கடுமையாக உழைத்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஜனநாயக நாட்டில் மக்களின் எண்ண ஓட்டம் சில நேரங்களில் எதிர்பாராத தேர்தல் முடிவுகளைத் தருகிறது. அந்த வகையில், தமிழக மக்களின் தற்போதைய மனநிலை மற்றும் ஜனநாயக முடிவுகளுக்குத் தலைவணங்கி, மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

தமிழக வெற்றிக் கழகம் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே முன்னிறுத்திச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய், பெருந்தலைவர் காமராஜர் அவர்களைத் தனது கொள்கைத் தலைவராக ஏற்று, அவர் காட்டிய வழியில் சமூக நீதிக்காகத் தொடர்ச்சியாகப் பயணிப்போம் என்கிற கொள்கையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் லட்சியங்களை உள்வாங்கி, சமூக நீதிப் பாதையில் பயணிப்பதாக அறிவித்துள்ள ஒரு இயக்கத்தை ஆதரிப்பது, தமிழகத்தில் மதச்சார்பற்ற விழுமியங்களை வலுப்படுத்தும் என்று காங்கிரஸ் நம்புகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் மதவாத சக்திகள் தமிழகத்திற்குள் எந்தக் காலத்திலும் காலூன்றி விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் சமரசமற்ற உறுதியைக் கொண்டுள்ளது.

மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும், தமிழகத்தில் ஒரு வலிமையான மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். இதில் தமிழக மக்களுக்குத் துரோகம் இழைக்கப்படுவதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.

தமிழக மக்களின் நலனையும், மாநிலத்தின் அமைதியையும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளைத் தனிமைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இத்தகைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி என்றும் மதவாதத்திற்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதியைக் காக்கவும் தனது பயணத்தைத் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

பெரும்பான்மையை நிரூபிக்கும் இடம் சட்டபேரவைதான்… கமல் காட்டம்

தமிழ்நாடு ஆளுநர் தரப்பில் இருந்து வெளியான விளக்க அறிக்கை

விஜய் முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்பார்: ரங்கசாமி உறுதி

அவசரப்பட வேண்டாம்…. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் எதற்காக?

நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம்… முன்னாள் முதல்வர் கூறியது எதற்காக?

TAGGED:Congress PartyexplanationPeaceStatesupport decisionTamil Nadu peopleஅமைதிஆதரவு முடிவுகாங்கிரஸ் கட்சிதமிழக மக்கள்மாநிலம்விளக்கம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin

சுற்றுலா கப்பலில் பரவும் ஹண்டா வைரஸ்… பயணிகள் அதிர்ச்சி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?