புதுடில்லி: சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை… இந்தியாவில் சர்க்கரை விலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தகத் தலைமை இயக்ககம் வெளியிட்டுள்ளது.