By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இலங்கையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 3 சீனர்கள் கைது
    1 Min Read
    ‘மௌனம் சம்மதம்’ என்ற விதிக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம்
    1 Min Read
    அமெரிக்காவின் ‘எச்-1பி’ விசா விண்ணப்பங்கள் 38% சரிவு: டிரம்ப் அரசின் கடுமையான விதிகளே காரணம்
    1 Min Read
    “மகனின் திருமணத்தில் கலந்து கொள்வது கடினம்” – ஈரான் போர் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை
    1 Min Read
    இனி ‘விசா’ கட்டாயம்: 60 நாட்கள் இலவச தங்கும் அனுமதியை ரத்து செய்த தாய்லாந்து அரசு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    30 வயதிற்கு பின் பெண்களை தாக்கும் நோய்
    2 Min Read
    பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக ’ஹெல்த் மிக்ஸ்’ கொடுக்கலாமா?
    1 Min Read
    வினேஷ் போகத் பங்கேற்கத் தடை இல்லை: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    1 Min Read
    தமிழகத்தில் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தவெக முதல்முறையாக தடம் பதிக்கும் வாய்ப்பு!
    2 Min Read
    திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்: 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அனைத்து பாகங்களிலும் அற்புத மருத்துவகுணம் கொண்ட சங்குப்பூ
    1 Min Read
    பற்களை பாதுகாக்கும் எளிய இயற்கை வழிமுறை உங்களுக்காக!!!
    1 Min Read
    நல்ல தூக்கத்தை அளிக்கும் மருதாணி பூக்கள்
    1 Min Read
    கொசு, பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்க வேம்பை இப்படி பயன்படுத்துங்க!
    1 Min Read
    பிளஸ்-2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை
    3 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: “தொகுதி மக்களின் நலனுக்காகவே முடிவு” – தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள் விளக்கம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > “தொகுதி மக்களின் நலனுக்காகவே முடிவு” – தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள் விளக்கம்
அரசியல் செய்திகள்

“தொகுதி மக்களின் நலனுக்காகவே முடிவு” – தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள் விளக்கம்

Nagaraj
Last updated: May 26, 2026 7:13 pm
By Nagaraj 5 Min Read
Share
SHARE

சென்னை: எதற்காக பதவி விலகினோம் என்பதை தெரிவிப்பதற்காக பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்கள் 3 மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர்.

அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் (தனி) – மரகதம் குமரவேல், பெருந்துறை – ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் (தனி) – சத்யபாமா ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த சம்பவம் சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எதற்காக பதவி விலகினோம் என்பதை தெரிவிப்பதற்காக பதவி விலகிய 3 மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது மரகதம் குமரவேல் அளித்த பேட்டியில், “தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நாங்கள் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் இன்றைய தினம் முழு மனதோடு கழகத்தில் இணைந்து கொண்டோம்.

இன்றைய தினம் பேரவை தலைரை சந்தித்து மதுராந்தகம் தொகுதி, பெருந்துறை தொகுதி தாராபுரம் தொகுதி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதியிலும் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் போட்டியிட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள். நாங்கள் எதற்கு பதவி விலகினோம் என்ற காரணத்தை இந்த நேரத்தில் மக்களிடத்தில் தெளிவாக வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

தேர்தல் முடிவு மே நான்காம் தேதி வெளியான பிறகு ஏழாம் தேதியிலிருந்து பல்வேறு பிரச்சனைகள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தொடர்ந்து நடந்தது. தலைமைக்குழு நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்தார்கள். இரண்டு நிலைப்பாடு எடுத்தார்கள். ஒன்று திமுகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்தார்கள்.

இன்னொன்று த.வெ.கவுடன் ஆதரவு கொடுத்து ஆளுங்கட்சி போல் நம்முடைய தொகுதியில் மக்கள் பணியாற்ற முடியும். மக்களுடைய கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்ற இரண்டு நிலைப்பாட்டை எடுத்தார்கள். எங்களுக்கெல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தோடு சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு விருப்பமில்லை.

அங்கு இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மனதிலும் அதுதான் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. நாங்கள் முன்னதாக முடிவு எடுத்துவிட்டோம். அதேபோன்று சி.வி. சண்முகம் தலைமையில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள். காரணம் இதேதான். திராவிட முன்னேற்ற கழகத்தோடு சேர்ந்து ஆட்சி அமைக்க கூடாது என்பதற்காகதான் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டோம்.

நாங்கள் தவெக ஆதரவு நிலைப்பாடுதான் எடுத்தோம். நாங்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்துதான் ஆதரவு கொடுத்தோமே தவிர நாங்கள் கட்சியை விட்டு போகவில்லை. ஆனால் அன்றைய தினத்திலிருந்தே சமூக வளத்தளங்களிலும் அனைத்து ஊடகங்களிலும் எங்களைப் பற்றி அவதூறாக பல்வேறு விமர்சனங்களை எங்கள் மீது வைத்திருந்தார்கள்.

எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 54 ஆண்டு காலமாக ஒரு வீரநடை போட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மாபெரும் இயக்கம். அந்த இயக்கத்திற்கு துரோகம் செய்கின்ற வகையில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் ஆட்சி அமைப்பதற்கு எங்களுடைய மனம் விரும்பவில்லை.

எங்களை போன்றவர்கள் அங்கு இருக்கின்றார்கள். நாங்கள் முன்னதாக இந்த முடிவு எடுத்திருக்கின்றோம். அதேபோன்று தொகுதியில் எங்களை பற்றி அவதூறாக பரப்பி எங்களுடைய கழகத்தை சார்ந்தவர்களே எங்களை பற்றி எவ்வளவு விமர்சனங்கள் செய்ய வேண்டுமோ அந்த அளவிற்கு விமர்சனம் செய்திருக்கின்றார்கள். எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால் ஏற்கனவே எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2021இல் மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நானும், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமாருக்கும் தான் தெரியும் அதோட கஷ்டம். கடந்த ஐந்து வருட காலமாக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள்.

ஆனால் எங்களால் அவருடைய கோரிக்கைகள் நிறைவேற்ற முடியவில்லை. அதிகார அளவிலும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தார்கள். நாங்கள் சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் ஒரு 10% வாக்குறுதி 10% கோரிக்கை கூட நிறைவேற்ற நிறைவேற்றவில்லை. எங்களுடைய மதராந்தகம் தொகுதியில் அதே போன்று இந்த முறையும் நாங்கள் எதிர்கட்சியாக செயல்பட முடியாது.

ஏனென்றால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் 2026ல் நாங்கள் மக்களை சந்திக்கின்ற பொழுது கடந்த முறையும் நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த போது எதையும் நீங்கள் செய்யவில்லை. இந்த முறையாவது வெற்றி பெற வெற்றி பெற வைக்கிறோம். நீங்கள் எங்களுடைய கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று எங்களிடத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து என்னுடைய மதுராந்தகம் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள்.

அவர்களுடைய உணர்வுகளை புரிந்துதான் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம். இது எங்களுடைய தனிப்பட்ட நிலைப்பாடுதான். நாங்கள் சுய நலத்துக்காக எடுக்கவில்லை. சுய மரியாதைக்காகவும் எங்களுடைய தொகுதி மக்களுடைய நலனுக்காகவும் தான் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம். அதே போன்று இன்றைய தினம் நாங்கள் பேரவை த தலைவரிடம் கடிதம் கொடுத்திருக்கின்றோம். அதேபோன்று முதல்வர் விஜய்யை சந்தித்து அவரிடம் நாங்கள் வாழ்த்து பெற்றிருக்கின்றோம்.

நாங்கள் இந்த நிலைப்பாட்டை ஏன் எடுத்திருக்கின்றோம் என்றால் ஜெயலலிதா எப்பொழுதும் ஆட்சி பொறுப்பில் ஏற்கின்ற பொழுது முதல் கையெழுத்து பெண்களுக்குடைய பாதுகாப்பிலும் பெண்கள் நலனை சார்ந்த திட்டங்களை எல்லாம் அறிவிப்பார். அதே போன்றுதான் முதல்வர் விஜய் அவர் முதலமைச்சராக பதவியேற்ற முதல் கையெழுத்தே பெண்கள் நலனை சார்ந்த திட்டங்களை அறிவித்திருக்கின்றார்.

அதேபோன்று இதுக்கு ஒரு படி மேலாக சொல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகத்தை திராவிட முன்னேற்ற கழகம் கடந்த ஆட்சியில் வந்த உடனே மூடிவிட்டார்கள்.

ஒரு ஏழை எளிய மக்கள் வயிராற சாப்பிடுகின்ற அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். ஆனால் நாங்களும், எந்த மக்களும் கோரிக்கை வைக்கவில்லை. ஒரு தாய் உள்ளத்தோடு ஜெயலலிதா கொடுத்த திட்டத்தை அவர்கள் மூடிவிட்டார்கள். ஆனால் முதல்வர் விஜய் அவர்கள் பதிவேற்ற பிறகு அம்மா உணவகம் மீண்டும் அமல்படுத்துவதற்காக அறிவித்திருக்கின்றார். இதையெல்லாம்தான் உணர்வு பூர்வமாக நாங்கள் வரவேற்கின்றோம்.

அதேபோன்று அவர் பதவி ஏற்று 15 நாட்கள் கூட ஆகவில்லை. பல்வேறு திட்டங்களை மக்களுக்காக தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கின்றார். மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்ல ஆட்சி கொடுப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. எங்களுடைய மதுராந்தகம் தொகுதி மக்களுடைய நலனை கருதி மட்டும்தான் நாங்கள் தமிழக வெற்றி கழகத்தில் மனப்பூர்வமாக இணைந்து கொண்டிருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

You Might Also Like

அன்று சொன்ன ஸ்டாலின், இன்று பேசுவது வேறு” – சண்முகம் விமர்சனம்

கல்வியில் அரசியல் அல்ல; மக்கள் நலனே முக்கியம் – கி.வீரமணி

“குதிரை பேரம் தேவையில்லை” – தவெக வலிமை குறித்து அமைச்சர் பேச்சு

குறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்த குஷ்பூ

TAGGED:AIADMKMaragatham KumaravelMLA ResignationPolitical BuzzTVKVijayஅதிமுகஅரசியல் பரபரப்புஎம்எல்ஏ ராஜினாமாதமிழக அரசியல்தவெகமரகதம் குமரவேல்விஜய்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

அன்று சொன்ன ஸ்டாலின், இன்று பேசுவது வேறு” – சண்முகம் விமர்சனம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?