பீஜிங்: சீனாவில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 8.07 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 32.789 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 96.033 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.