சென்னை: உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள் கிராஷ் டயட் முறைகளை தவிர்க்க வேண்டும் என நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.
20 வயதில் உடல் தோற்றத்திற்கே முக்கியத்துவம் கொடுத்ததாகவும், தற்போது ஆரோக்கியமாக இருப்பதே உண்மையான உடற்தகுதி என்பதை புரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார். சத்தான உணவுகளை முறையாக எடுத்துக்கொண்டு, மற்றவர்களுடன் ஒப்பிடாமல் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.