சென்னை: விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் ஜூலை 3ஆம் தேதி வெளியாக உள்ளது.