சென்னை: நாளை வெளியீடு… விதார்த், கலையரசன், திரிகுண் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் சசோ கணேசன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஹைபர்லிங்க் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்தக் கொலையை நான்தான் செய்தேன் என நான்கு பேர் கூறுகின்றனர். உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.