சென்னை: முதல் பாடல் ரிலீஸ்… முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் பாடல் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.
சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.