இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வரும் ஜூன் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கடுமையான பொருளாதார மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜம்மு-காஷ்மீர் அவாமி ஆக்ஷன் கமிட்டி தலைமையில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து பாகிஸ்தான் அரசு, ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகம் மற்றும் ஜேஏஏசி அமைப்பு இடையே முசாராபாத் ஒப்பந்தம் கையெழுத்தானது. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே அதன் நோக்கமாக இருந்தது.
ஆனால் பல மாதங்கள் கடந்தும் முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் அதிருப்தியடைந்த ஜேஏஏசி அமைப்பு ஜூன் 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.